/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
/
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
ADDED : ஜூலை 31, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த பிக்கானுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 53. இவர் செக்கில்நத்தத்தில், 10 ஆண்டுகளாக, தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இதில், 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையை ஒட்டி ஒரு கொட்டகை உள்ளது. அங்கு தென்னை மட்டைகளை போட்டு வைத்திருந்தனர். நேற்று காலை, 11:00 மணியளவில் அந்த கொட்டகையிலிருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில், தீப்பிடித்து மளமளவென பரவியது. அங்கு பணிபுரிந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். அதிஷ்டவசமாக இதில், யாரும் காயமடையவில்லை. பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த தென்னை நார்கள், இயந்திரங்கள் முற்றிலும் கருகி நாசமாகின.
இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர். அருகிலிருந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து தீப்பொறி விழுந்து தீ விபத்து நடந்ததா அல்லது வேறேதும் காரணமா என, பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

