UPDATED : நவ 08, 2026 05:55 AM
ADDED : நவ 08, 2026 03:27 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சூப்பர் மார்க்கெட் எதிரில், புதிதாக ஒரு பட்டாசு கடை திறக்கப்பட்டது.
ஆனால் இதற்கான உரிமத்தை அவர்கள் பெறவில்லை. நேற்று முன்தினம் இரவு அங்கு வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு கடை உரிமத்தை கேட்டபோது, கடையில் இருந்தவர்கள் அதுபற்றி தமக்கு தெரியாது எனக்கூறியுள்ளனர். இது குறித்து, கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசன் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், பட்டாசு கடையை மூடி அதிலிருந்த, 500 கிலோ அளவிலான, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரான பர்கூர், சஞ்சீவி செட்டிதெருவை சேர்ந்த கடை உரிமையளர் செந்தில்குமார், 53, என்பவரை கைது செய்து பிணையில் விடுவித்தனர்.
