/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 வயது குழந்தை உள்பட ஐந்து பேர் மாயம்
/
2 வயது குழந்தை உள்பட ஐந்து பேர் மாயம்
ADDED : டிச 13, 2025 05:37 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தை சேர்ந்-தவர் குமுதா, 25, துணிக்கடை ஊழியர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப-வில்லை. பெண்ணின் பெற்றோர் அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* வேப்பனஹள்ளி அடுத்த கொங்கனபள்ளியை சேர்ந்தவர் சிவப்-பிரசாத், 48, மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 3ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மனைவி புகார்படி, வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். * ஓசூர் அடுத்த தேவீரப்பள்ளியை சேர்ந்தவர் பூமிகா, 26, கூலித்-தொழிலாளி. இவர், தன் 2 வயது ஆண் குழந்தையுடன் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றார்; மீண்டும் வீட்-டுக்கு வராததால், பெண்ணின் கணவர் அளித்த புகார்படி, பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* தேன்கனிக்கோட்டை அடுத்த கெம்பட்டியை சேர்ந்தவர் ராணி உர்ரான், 24, தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 5ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து பெண்ணின் கணவர், நேற்று முன்தினம் தளி போலீசில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சன் மகி, 23, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

