/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணையில் நீர்திறப்பால் 14வது நாளாக வெள்ள எச்சரிக்கை
/
தென்பெண்ணையில் நீர்திறப்பால் 14வது நாளாக வெள்ள எச்சரிக்கை
தென்பெண்ணையில் நீர்திறப்பால் 14வது நாளாக வெள்ள எச்சரிக்கை
தென்பெண்ணையில் நீர்திறப்பால் 14வது நாளாக வெள்ள எச்சரிக்கை
ADDED : அக் 17, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த, 3ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில், 49.95 அடியாக இருந்தது. மாலை, 4:00 மணிக்கு, அணைக்கு நீர்வரத்து, 1,736 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு, 1,825 கன அடி நீர் திறக்கப்பட்டது. தரைப்பாலத்தை மூழ்கடித்த படி தண்ணீர் செல்வதால், 4வது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்கு வர தடை தொடர்கிறது.
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்தும், 1,800 கன அடிக்கு மேல் நீர் திறப்பும் உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, 14வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என, நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மழையளவு வருமாறு: மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, ராயக்கோட்டையில், 10 மி.மீ., பாரூர், 8, ஓசூர், 5, தேன்கனிக்கோட்டை, 3, சூளகிரி, 2, போச்சம்பள்ளி, 1.20, ஊத்தங்கரை, 1, கெலவரப்பள்ளி அணை, 1 என மொத்தம், 31.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு மிதமான மழை பெய்தது.