/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 மாதத்தில் 2வது முறையாக பயங்கர சத்தத்தால் மக்கள் பீதி
/
2 மாதத்தில் 2வது முறையாக பயங்கர சத்தத்தால் மக்கள் பீதி
2 மாதத்தில் 2வது முறையாக பயங்கர சத்தத்தால் மக்கள் பீதி
2 மாதத்தில் 2வது முறையாக பயங்கர சத்தத்தால் மக்கள் பீதி
ADDED : மே 07, 2024 07:14 AM
ஓசூர் : ஓசூரில், 2 மாதத்தில், 2வது முறையாக நில அதிர்வு போன்ற பயங்கர சத்தம் கேட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த மார்ச், 6ல் பயங்கர வெடி சத்தம் கேட்டது. அது எதனால் ஏற்பட்டது என்பதை யாராலும் சரியாக கூற முடியவில்லை. நேற்று மதியம், 3:00 மணிக்கு, மீண்டும் பயங்கர வெடி சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள், அலுவலகங்களில் வேலை பார்த்தவர்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். மக்கள் மத்தியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வெடி சத்தத்தின்போது, வீடுகளில் இருந்த பாத்திரங்கள் அதிர்ந்தன. இச்சத்தம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் உணரப்பட்டது.
அது எதனால் ஏற்பட்டது என்பதை, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் என, யாராலும் சரியாக கூற முடியவில்லை. இது குறித்து விசாரித்து வருவதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். 'சூப்பர் சோனிக்' எனப்படும் ஒலியின் வேகத்தை விட, அதிக வேகத்தில் விமானம் செல்லும்போது, இதுபோன்ற சத்தம் ஏற்படக்கூடும் என கூறும், வருவாய்த்துறையினர், விமானம் சென்றதால் தான், இதுபோன்ற சத்தம் ஏற்பட்டது என்பதை உறுதி செய்யவில்லை.