/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானை மிதித்ததில் வனக்குழு தலைவர் பலி
/
யானை மிதித்ததில் வனக்குழு தலைவர் பலி
ADDED : ஜூலை 10, 2025 01:51 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி அருகே குடிசல்பையில் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமன்னா, 65. இவர் அப்பகுதி பழங்குடியின வனக்குழு தலைவர். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில், ஒரு பசு மாடு மட்டும் திரும்பாததால், அதை தேடி வனத்திற்கு சென்றார். மாடு திரும்பிய நிலையில் அவர் வராததால், அவரை தேடி உறவினர்கள் வனத்திற்கு சென்றனர். இரவானதால் அவரை தேட முடியவில்லை. நேற்று காலை, 7:30 மணிக்கு, பனைக்காப்பு காட்டிலுள்ள மேட்டுக்கல் வனத்தில், தலையில், யானை மிதித்து இறந்து கிடந்தார். அந்த இடத்தில் யானையின் காலடி தடங்களும் இருந்தன.
அடர்ந்த வனத்திற்குள் ஹேமன்னா இறந்து கிடந்ததால், வாகனம் உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் துாளி கட்டி, அவரது சடலத்தை, 3 கி.மீ., துாரம் சுமந்து வந்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.