sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

8 யானைகளை சானமாவு வனத்திற்கு விரட்டும் பணியில் வனத்துறையினர்

/

8 யானைகளை சானமாவு வனத்திற்கு விரட்டும் பணியில் வனத்துறையினர்

8 யானைகளை சானமாவு வனத்திற்கு விரட்டும் பணியில் வனத்துறையினர்

8 யானைகளை சானமாவு வனத்திற்கு விரட்டும் பணியில் வனத்துறையினர்


ADDED : டிச 11, 2025 06:40 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி, மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள, 8 யானைகளை சானமாவு வனப்-பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் மகாராஜகடை வனப்பகுதிக்கு கடந்த, 2019 கொரோனா காலகட்டத்தில், ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து, 10க்கும் மேற்பட்ட யானைகள் வந்ததில், 8 யானைகள் நிரந்தரமாக அப்பகுதியிலேயே தங்கி விட்டன. அவை பலரை தாக்கியும், 6 விவசாயிகளை மிதித்தும் கொன்றன. இவற்றை, ஆந்திர மாநில வனத்-திற்கோ, சானமாவு வனப்பகுதிக்கோ விரட்ட, விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினர்.அப்பகுதிகளில், மின்வேலி அமைக்க விவசா-யிகள் கோரிக்கை படி, மின்வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இருப்பினும் யானைக்-கூட்டம், வனப்பகுதியில் இருந்து வெளியே-றாமல் வேப்பனஹள்ளி அருகே சிகரலப்பள்ளி, கொங்கனப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய கிரா-மங்களுக்குள் புகுந்து, தக்காளி தோட்டங்கள், பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு, அந்த, 8 யானைக-ளையும், கர்நாடக மாநிலத்தின் அடர்ந்த வனப்ப-குதிக்கு விரட்டும் பணியில், 50 பேர் கொண்ட, தமிழக வனத்துறையினர் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்து, யானைகளை, கர்நாடக மாநில வனப்ப-குதிக்கு விரட்ட முயன்றபோது, வேப்பனஹள்ளி-யிலிருந்து கே.ஜி.எப்., செல்லும் சாலையை மறித்து, யானைகள் நின்றன.

நேற்று அதிகாலை, வேப்பனஹள்ளி அடுத்த பதி-மடுகு கிராமத்தில் உள்ள முனியப்பன் என்பவரு-டைய தோட்டத்திற்குள் புகுந்த, 8 யானைகளும் அங்கிருந்த, 2 ஏக்கர் தக்காளி தோட்டத்தை மிதித்து நாசம் செய்தன. அவற்றை நேற்று மாலை, கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us