/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடம்பெயர்ந்த யானைகளை விரட்டும் வனத்துறையினர்
/
இடம்பெயர்ந்த யானைகளை விரட்டும் வனத்துறையினர்
ADDED : நவ 28, 2024 02:45 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள, ராயக்கோட்டை, உரிகம், அஞ்செட்டி, ஓசூர் உட்பட, ஏழு வனச்சரக பகுதிகளில் மொத்தம், 250க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.
இதில் ராயக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த, 60க்கும் மேற்பட்ட யானைகளில், 40க்கும் மேற்பட்ட யானைகள் தனியாக பிரிந்து, நேற்று முன்தினம் இரவு, நாகமங்கலம் கிராமத்தை கடந்து, ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளன. இதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிபள்ளி, அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இரவு நேரங்களில் ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு சேகரிக்கவோ வனத்திற்கு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
யானைகள் எந்த நேரத்திலும் ஓசூர் - ராயக்கோட்டை சாலையை கடந்து, போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. அதனால், 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.