/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜிஞ்சுப்பள்ளியில் ரூ.12.85 கோடியில் நெல் சேமிப்பு வளாகத்திற்கு அடிக்கல்
/
ஜிஞ்சுப்பள்ளியில் ரூ.12.85 கோடியில் நெல் சேமிப்பு வளாகத்திற்கு அடிக்கல்
ஜிஞ்சுப்பள்ளியில் ரூ.12.85 கோடியில் நெல் சேமிப்பு வளாகத்திற்கு அடிக்கல்
ஜிஞ்சுப்பள்ளியில் ரூ.12.85 கோடியில் நெல் சேமிப்பு வளாகத்திற்கு அடிக்கல்
ADDED : டிச 11, 2025 06:28 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளியில், 12.85 கோடி ரூபாய் மதிப்பில், 9,000 டன் கொள்ளளவு கொண்ட கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகம் கட்டப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டப்பட உள்ள இந்த கட்டடத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை தலைமை செயல-கத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஜிஞ்சுப்பள்-ளியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் தினேஷ்-குமார், தி.மு.க.,--- எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் மதிய-ழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ்குமார் பேசியதா-வது: ஜிஞ்சுப்பள்ளியில், 10 ஏக்கரில், 12.85 கோடி ரூபாய் மதிப்பில், 9,000 டன் கொள்ளளவு கொண்ட, 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்-கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், அலுவலக கட்டடம், சுமை துாக்கும் பணி-யாளர்களுக்கான அறைகள், காவலர் அறை, சுற்-றுச்சுவருடன் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஆழ்துளை கிணறு, புதிய சாலை அமைக்கும் பணிகளும் துவங்க உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொதுமேலாளர் தணிகாசலம், கிருஷ்ணகிரி தாசில்தார் ரமேஷ், தி.மு.க., நகர பொறுப்பாளர் அஸ்லம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

