/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
/
தனியார் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
ADDED : ஆக 07, 2024 06:42 AM
கிருஷ்ணகிரி: ஓசூரில், தனியார் நிறுவன பெண் ஊழியரிடம், 9 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவை சேர்ந்தவர் கோகிலா, 27; இவர், பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஏப்., 20 ல் இவரது மொபலை் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதிநேர வேலை பார்த்தால் ஊதியம், முதலீட்டுக்கு லாபம் என இருந்தது. இதை நம்பிய கோகிலா, அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு, 9 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தார். அதன் பிறகு கோகிலாவை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும், 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தன. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா கொடுத்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.