/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'டாஸ்க் கம்பிளிட் ஜாப்' எனக்கூறி ஓசூரில் ரூ.9.61 லட்சம் மோசடி
/
'டாஸ்க் கம்பிளிட் ஜாப்' எனக்கூறி ஓசூரில் ரூ.9.61 லட்சம் மோசடி
'டாஸ்க் கம்பிளிட் ஜாப்' எனக்கூறி ஓசூரில் ரூ.9.61 லட்சம் மோசடி
'டாஸ்க் கம்பிளிட் ஜாப்' எனக்கூறி ஓசூரில் ரூ.9.61 லட்சம் மோசடி
ADDED : ஜன 31, 2024 03:31 PM
கிருஷ்ணகிரி : ஓசூரில், 'டாஸ்க் கம்பிளிட் ஜாப்' எனக்கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், 9.61 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 42; தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த, 2023 டிச., 16 ல் இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு ஒரு, 'மெசேஜ்' வந்தது. அதில், 'பகுதி நேர, 'டாஸ்க் கம்பிளிட் ஜாப்' உள்ளது, நாங்கள் அனுப்பும் லிங்குகளுக்கு லைக் செய்தால் ஊதியம், முதலீட்டிற்கு அதிக லாபம் தரப்படும்' என கூறப்பட்டிருந்தது.இதை நம்பிய சுப்பிரமணியன், அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு, 9.61 லட்சம் ரூபாயை அனுப்பினார். பணம் அனுப்பியவுடன் சுப்பிரமணியை தொடர்பு கொண்ட, 'வாட்ஸாப்' எண், அவர்கள் அனுப்பிய இணையதள லிங்குகள் முடங்கின. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.