UPDATED : நவ 12, 2026 02:26 AM
ADDED : நவ 12, 2026 01:55 AM

அ நிறம் | அளவு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஊத்தங்கரை அரிமா சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாம் நேற்று
நடந்தது.
அரிமா சங்க முன்னாள் தலைவர் ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் வேலாயுதம், ஜெகநாதன், அர்ஜூனன், மாரிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கண் பரிசோதனை மற்றும் கண் குறைபாடுகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், ஈ.சி.ஜி., ரத்த பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.
