நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே ஜார்கலட்டி ஊராட்சி ஒன்றிய துவக்-கப்பள்ளியில், தேன்கனிக்கோட்டை அரிமா சங்கம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகியவை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைகள், நுரையீரல், ரத்த அழுத்தம், கை, கால், மூட்டு வலி, கண், காது, மூக்கு, தொண்டை பரிசோதனை செய்யப்பட்டது. அரிமா சங்க தலைவர் லட்சுமிபதி, பொருளாளர் குழந்தை ஏசு, நிர்வாக செய-லாளர் மோகன், உட்பட பலர் பங்கேற்றனர்.

