ADDED : ஆக 13, 2026 03:03 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., மாயக்கண்ணன் மற்றும் போலீசார், கொல்லப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனை செய்-தனர்.
அப்போது அவ்வழியாக வந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, 57,500 ரூபாய் மதிப்புள்ள, 1.150 கிலோ எடையில் கஞ்சா இருந்தது. அதை விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரிந்தது. விசாரித்த போது, கர்நாடகா மாநிலம், கனகபுரா அருகே திம்மன்தொட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், 46, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
