/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மலையிலிருந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத பாறை
/
கிருஷ்ணகிரி மலையிலிருந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத பாறை
கிருஷ்ணகிரி மலையிலிருந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத பாறை
கிருஷ்ணகிரி மலையிலிருந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத பாறை
ADDED : டிச 05, 2024 07:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையிலிருந்து, குடியிருப்பு பகுதி அருகே உருண்டு விழுந்த ராட்சத பாறையால் பரபரப்பு
ஏற்பட்டது.கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பஞ்.,க்கு உட்பட்ட பழைய-பேட்டை தம்புசாமி நகரில், கிருஷ்ணகிரி
மலை அடிவாரத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெங்கடா-சலம் வீடு உள்ளது.
மலையிலிருந்த, 100 டன் அளவு எடையுள்ள ராட்சத பாறை ஒன்று நேற்று அதிகாலை, 4:00 மணியளவில்
உருண்டு விழுந்ததில், வெங்கடாசலம் வீட்டின் பின்பக்க சுற்றுச்-சுவர் இடிந்தது.கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, கனிமவளத்துறை துணை இயக்குனர் ஜெயபால், தாசில்தார்
வளர்மதி உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தீயணைப்பு துறையினரும் வர-வழைக்கப்பட்டு, பாறை
மேலும் உருளுமா என ஆய்வு செய்-தனர். பாறை உருண்ட பகுதி, கிருஷ்ணகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து, 300
மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்ற விதி-முறை, அங்கு பின்பற்றப்படவில்லை.
மலையிலிருந்து வடியும் மழைநீர், அப்பகுதி ஓடைக்கு சென்று, பாப்பாரப்பட்டி ஏரியில் கலக்கும். அந்த ஓடை
புறம்போக்கு பகுதி பெரும்பாலும் ஆக்கிர-மிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளி-யேற வழியில்லாததால், ராட்சத பாறை
உருண்டு விழுந்துள்ளது. இந்த பாறையை உடைத்தால், அதன் மேல்பகுதியிலுள்ள பாறை-களும் உருண்டு விழும்
அபாயம் உள்ளது. மேலும் வரும் நாட்-களில், கிருஷ்ணகிரியில் மழை பொழியும் பட்சத்தில், இப்பகு-தியில்
பாறைகள் உருண்டு பெரிய விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பாறை உருண்ட பகுதியை அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள், பொது-மக்கள் என அனைவரும் கண்காட்சியை
பார்ப்பது போல், பார்த்து செல்கின்றனர். பாதிப்புகள் குறித்து, யாரும் வாய் திறக்க-வில்லை. மாவட்ட நிர்வாகம்
தலையிட்டு பாறை உருண்ட பகு-தியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.