ADDED : அக் 29, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகலுார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 37. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஈச்சங்கூரில் குடும்பத்துடன் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல்சூளையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, செங்கல்சூளையில் ராஜேஷ் பணியாற்றி கொண்டிருந்த நிலையில், அவரது மகள் சகாதா, 4, அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது, செங்கல்சூளைக்கு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, சிறுமி மீது மோதியதில், சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். விபத்திற்கு காரணமான லாரி டிரைவரான, ஈச்சங்கூரை சேர்ந்த மஞ்சுநாத், 39, என்பவரை, பாகலுார் போலீசார் கைது செய்தனர்.

