/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மந்தம்
/
தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மந்தம்
ADDED : அக் 26, 2024 06:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகில் உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தைக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலுார், கடலுார், விழுப்புரம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். தீபாவளி பண்டிகைக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், ஆடுகள் விற்பனை ஜோராக நடக்கும் என எதிர்பார்த்து வந்திருந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பண்டிகை காலங்களில் ஒரு ஜோடி ஆடு, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், நேற்று விலை குறைந்து, 15 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. 10 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும் நிலையில், நேற்று, 5 கோடிக்கும் குறைவாகத்தான் விற்பனையானது. தீபாவளிக்காக ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தொடர் மழையாலும், ஆடுகளின் வரத்து அதிகளவில் இருந்ததாலும், விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.