/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சி கமிஷனர் நியமனம் 5 மாதத்திற்கு பின் அரசு நடவடிக்கை
/
ஓசூர் மாநகராட்சி கமிஷனர் நியமனம் 5 மாதத்திற்கு பின் அரசு நடவடிக்கை
ஓசூர் மாநகராட்சி கமிஷனர் நியமனம் 5 மாதத்திற்கு பின் அரசு நடவடிக்கை
ஓசூர் மாநகராட்சி கமிஷனர் நியமனம் 5 மாதத்திற்கு பின் அரசு நடவடிக்கை
ADDED : ஜூன் 24, 2025 01:26 AM
ஓசூர்,ஓசூர் மாநகராட்சி கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, 5 மாதத்திற்கு பின் அரசு நியமனம் செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கமிஷனராக கடந்தாண்டு ஆக., முதல் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த், கடந்த ஜன., மாதம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கிருந்து அவர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். ஆனால், ஓசூருக்கு புதிய கமிஷனர் நியமிக்கப்படவில்லை. சேலம் மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த, பூங்கொடி அருமைக்கண் என்பவர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரும் மாற்றப்பட்டு, ஆவடி மாநகராட்சி துணை கமிஷனர் மாரிச்செல்வி, பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.ஓசூர் மாநகராட்சிக்கு கடந்த, 5 மாதமாக நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படாமல் இருந்தது. அதனால், மாநகராட்சியின் வரி வருவாய், புதிய வரி விதிப்பு மற்றும் நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணாவை, ஓசூர் மாநகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்து, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இவர் கடந்த, 2021ம் ஆண்டு, ஓசூர் சப்-கலெக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது