/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் கடும் அவதி
/
பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் கடும் அவதி
ADDED : பிப் 17, 2025 02:29 AM
போச்சம்பள்ளி: பெங்களூருவிலிருந்து, திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மத்துார் டோல்கேட் அருகில் பழுதாகி நின்றது.
பயணிகள் இறங்கி, வேறு பஸ்சிற்கு காத்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வழியில் சென்ற அரசு பஸ்கள், காத்திருந்த பயணிகளை ஏற்றிச் செல்-லாமல் சென்றது. அதன் பிறகு வந்த, 2 பஸ்களில் குறிப்பிட்ட அளவு பயணிகள் ஏறிச்சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்-திற்கும் மேலாக பழுதான பஸ்சில் வந்த பயணிகள் கடும் அவ-திக்குள்ளாயினர். அரசு பஸ் பழுதான நிலையில், அதில் வந்த பயணிகளை மற்ற அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சில் ஏற்ற மறுத்து சென்றது, பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.