ADDED : ஏப் 13, 2025 04:39 AM
ஓசூர்: ஓசூர், கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பாக்கிய-மணி தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்த்துறை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் மோகன் அந்திரியாஸ், விளையாட்டு அறிக்கையை வாசித்தார்.
தர்-மபுரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், கிருஷ்ண-கிரி அரசு ஆண்கள் கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா ஆகியோர், கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.டி.,எஸ்.பி., ரவிச்சந்திரன் பேசும் போது, ''மாணவர்கள் வாழ்க்-கையில் வெற்றி பெற, சுய ஒழுக்கம், உயர்ந்த குறிக்கோள், கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் நெப்போலியன் ஆகியோரை உதாரணமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,'' என்றார்.
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா பேசும் போது, ''மாணவர்கள் மனம் தளராமல் முயற்சி செய்தால், கல்வி மூலம் வாழ்க்கையில் சாதிக்க முடியும்,'' என்றார்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்-தன. தாவரவியல் துறைத்தலைவர் ஜிவிகுமார் நன்றி கூறினார்.