/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
/
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
ADDED : ஜன 01, 2026 07:56 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த காவாய்ப்பட்டியை சேர்ந்தவர் வனஜா, 44. இவ-ருக்கு விவகாரத்து ஆன நிலையில், திருமணத்-தின்போது கொடுத்த வரதட்சணையை, கணவரி-டமிருந்து பெற்றுத்தர, கிருஷ்ணகிரி நீதிமன்-றத்தில் வழக்கு தொடர்ந்தார். வரதட்சணையை பெற்றுத்தரும் வழக்கு நடைமுறைக்காக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், வனஜா மற்றும் அவரின் கணவரையும் விசாரிக்க வேண்டும்.
அந்த மனுவை விசாரித்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப, குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு பெண் அலுவலர் மார்த்தா, 31, என்பவர், வனஜாவிடம், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வனஜா, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி ரசாயனம் தடவிய, 3,000 ரூபாயை வன-ஜாவிடம் போலீசார் கொடுத்தனுப்பினர். அதை நேற்று மாலை, 5:30 மணிக்கு, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து, வன்-முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் மார்த்-தாவிடம், வனஜா கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ரவி தலைமையி-லான போலீசார், மார்த்தாவை கைது செய்தனர்.

