/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காப்பீட்டு தொகையை முறைகேடாக பரிமாற்றம் செய்தவருக்கு 'காப்பு'
/
காப்பீட்டு தொகையை முறைகேடாக பரிமாற்றம் செய்தவருக்கு 'காப்பு'
காப்பீட்டு தொகையை முறைகேடாக பரிமாற்றம் செய்தவருக்கு 'காப்பு'
காப்பீட்டு தொகையை முறைகேடாக பரிமாற்றம் செய்தவருக்கு 'காப்பு'
ADDED : ஜன 01, 2026 07:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டியை சேர்ந்தவர் சத்யா, 22. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவருடன் கடந்த இரு ஆண்டுக-ளுக்கு முன் திருமணமானது.
சாமுவேல், ஒரு தனியார் நிறுனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். கடந்த, 2024, ஜூலை, 11ல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு விபத்து காப்பீட்டு தொகையாக, 35 லட்சம் ரூபாய் கிடைத்தது.
விபத்து காப்பீட்டு தொகையை, அந்த நிறுவனம் சாமுவேலின் மனைவி சத்யாவின் வங்கி கணக்-கிற்கு அனுப்பியது. ஆனால் சத்யாவிற்கு தெரி-யாமல், சாமுவேலின்
அண்ணன் வேலன், 33, என்பவர், அத்தொகையை முறைகேடாக, தன் மனைவி அருணா வங்கி கணக்கிற்கு மாற்றி-யுள்ளார். இதையறிந்த சத்யா கடந்த, 2025, ஜன., 2ல்
மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார-ளித்தார். இது குறித்து விசாரித்து வந்த போலீசார், நேற்று முன்தினம் வேலனை கைது செய்தனர். மேலும் அவரது மனைவி அருணா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்பட மூவரை, தேடி வருகின்றனர்.