/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காங்., முன்னாள் எம்.பி.,க்கு கிரானைட் குவாரி சங்கம் கண்டனம்
/
காங்., முன்னாள் எம்.பி.,க்கு கிரானைட் குவாரி சங்கம் கண்டனம்
காங்., முன்னாள் எம்.பி.,க்கு கிரானைட் குவாரி சங்கம் கண்டனம்
காங்., முன்னாள் எம்.பி.,க்கு கிரானைட் குவாரி சங்கம் கண்டனம்
ADDED : நவ 22, 2024 01:37 AM
காங்., முன்னாள் எம்.பி.,க்கு
கிரானைட் குவாரி சங்கம் கண்டனம்
கிருஷ்ணகிரி, நவ. 22-
கிருஷ்ணகிரி மாவட்ட கல்குவாரிகளில், 25,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய, காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமாருக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் குவாரி சங்கத்தினர், கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சங்க தலைவர் ஏகம்பவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட கல்குவாரிகளில், 25,000 கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக, காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமார் முதல்வரிடம் மனு அளித்ததாக கடந்த, 20ல் செய்தி வெளியானது. அரசு அனுமதி பெற்று நடக்கும் குவாரிகளில், தவறுகள் நடந்தால், கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவே, 10 ஆண்டுகளாக ஒரே விலையில் கற்கள் கொடுத்து வருகிறோம். இதனால் பல குவாரிகள் நஷ்டத்தால் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், முறைகேடு நடந்ததாக கூறும், காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமாருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். அரசியல் உள்நோக்கத்தோடு, தன் அரசியல் இருப்பை காட்டிக் கொள்ள, இதுபோன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கிரஷர் பெடரேஷன் தலைவர் சம்பங்கி உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 369 குவாரிகளில், மத்திய, மாநில அரசு அனுமதியுடன், 103 குவாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால், முன்னாள் எம்.பி., செல்லக்குமார்,, 174 கல்குவாரிகள் முறைகேடாக செயல்படுவதாகவும், 25,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற தகவல்களை கூறி, கல் குவாரி டெண்டர் நடக்கும் போதெல்லாம் தொழில் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துகிறார். இதுகுறித்த உண்மை தகவல்களை, ஆதாரங்களோடு தமிழக முதல்வரிடம் மனுவாக அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினர்.