/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பசுமை தமிழ்நாடு இயக்கம் 1,000 பனை விதைகள் நடவு
/
பசுமை தமிழ்நாடு இயக்கம் 1,000 பனை விதைகள் நடவு
ADDED : நவ 21, 2025 01:34 AM
கிருஷ்ணகிரி, பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், நாக்கினேரி ஏரிக்கரையில், 1,000 பனை விதைகள் நடப்பட்டது.பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், நேச்சுரல் யோகா அசோசியேஷன் நிறுவனம், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலைகளில் தண்ணீரை இருப்பு வைக்கவும், கிருஷ்ணகிரி ஒன்றியம் கல்லகுறிக்கி பஞ்., நாக்கினேரி ஏரிக்கரையில், 1,000 பனை விதைகள் நடும் நிகழ்வு நடந்தது. யோகா ஆசிரியர் வெங்கடேசன், பனை விதைகளை நடவு செய்து துவக்கி வைத்தார். வனவர் குப்புசாமி, வனக்காவலர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு யூத் யோகாசன மாநிலத் தலைவர் பாரஸ்மால், யோகா மாணவி அவந்திகா ஆகியோர், இந்த பனை விதைகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்திருந்தனர். இதில், சமூக ஆர்வலர் வினோத்குமார் மற்றும், 35 துாய்மை பணியாளர்களும் பனை விதைகளை நட்டனர். மேலும் மஞ்சப்பை விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

