ADDED : ஆக 26, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது-. இதில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான, 332 மனுக்களை வழங்கினர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கீழ்செம்படமுத்துார் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முனியப்பனுக்கு, 40,000 ரூபாய் மதிப்பில் செயற்கை கை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.