/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குட்கா கடத்தியவர் கைது இரண்டு கார் பறிமுதல்
/
குட்கா கடத்தியவர் கைது இரண்டு கார் பறிமுதல்
ADDED : ஆக 14, 2025 01:52 AM
தொப்பூர்,தர்மபுரியில், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளக்கல் அருகே, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் உட்பட போலீசார் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த சுசுகி சியாஸ், சவர்லெட் என்ஜாய் என, 2 காரை நிறுத்தியபோது, காரில் இருந்தவர்கள் தப்பிச்சென்றனர்.
அதில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். பிடிபட்ட நபர், தர்மபுரி மாவட்டம், மணல்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார், 26, என்பதும் தப்பி சென்றவர்கள், தர்மபுரி மாவட்டம், குண்டல்பட்டியை சேர்ந்த யுவராஜ், 25, அச்சாரஹள்ளியை சேர்ந்த சதீஷ், 28, பென்னாகரம் அடுத்த திருமல்வாடியை சேர்ந்த ரஞ்சித்குமார், 21 என்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து, காரில் சோதனை செய்தபோது, அதில், 75 கிலோ எடை கொண்ட, 40,000 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய, 2 கார்கள் மற்றும் குட்கா பொருட்களை தொப்பூர் போலீசார் பறிமுதல் செய்து, தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.