ADDED : ஜூலை 13, 2026 01:19 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் அசோக்குமார், சிவசந்தர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மதியம், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன் வாகன சோதனை செய்தனர். அவ்வழி-யாக வந்த இன்னோவா காரை சோதனை செய்ய நிறுத்தியபோது, சிறிது துாரத்திற்கு முன்பாக காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி-யோடினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை செய்த போது, 150 கிலோ தடை செய்யப்பட்ட புகை-யிலை பொருட்கள் இருந்தன.கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியிலிருந்து, ஈரோட்டிற்கு குட்கா கடத்தி செல்வது தெரிந்தது. 79,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை
பறிமுதல் செய்த போலீசார், தப்பிடியோடிய, கார் டிரைவரும், உரிமையாளருமான, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே சமந்துார் பூவேம்பு நகரை சேர்ந்த ஆனந்தா, 40,
என்பவரை தேடி வருகின்றனர்.
