தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டீ மாஸ்டர் உட்பட இருவர் மாயம்

டீ மாஸ்டர் உட்பட இருவர் மாயம்

டீ மாஸ்டர் உட்பட இருவர் மாயம்


ADDED : ஜூலை 13, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மத்துார் அருகே மஜித்-கொல்லஹள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார், 27. சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக உள்ளார்; கடந்த மாதம், 30ம் தேதி காலை, 7:00 மணிக்கு, வீட்-டிலிருந்து ஓமலுாருக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மாய-மானார். அவரது தந்தை செல்வம், 53, புகார்படி, மத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எஸ்.எல்.வி., நகரை சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீ, 19. காய்கறி வியாபாரம் செய்து வந்தார்; கடந்த மாதம், 8ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, பத்தலப்பள்ளி மார்க்-கெட்டில் உள்ள தனது காய்கறி கடையிலிருந்து வெளியே சென்-றவர் திரும்பி வரவில்லை. ஹட்கோ போலீசில் அவரது தந்தை சேட்டு, 52, புகார் செய்தார். விசாரணையில், அதிக கடன் சுமை காரணமாக, கோகுல்ஸ்ரீ மாயமானது தெரிந்தது. ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.இலவச கண் சிகிச்சை முகாம்

கிருஷ்ணகிரி, ஜூலை 13

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெண்ணார் அரிமா சங்கம், கோவை சங்-கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து, 165-வது இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.

அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி குத்துவிளக்-கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில், நுாற்றுக்கும் மேற்பட்-டவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். அறுவை சிகிச்சை தேவைப்படுவோரை தேர்வு செய்து, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ரோட்டரி கிளப் தலைவர் இன்பரசன், செயலாளர் ராஜகோபால், டாக்டர் பரத் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us