/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4.52 லட்சம் மதிப்புள்ள குட்கா காரில் கடத்தல்
/
ரூ.4.52 லட்சம் மதிப்புள்ள குட்கா காரில் கடத்தல்
ADDED : நவ 28, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் எஸ்.எஸ்.ஐ., கோவிந்தசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காரக்குப்பம் பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி காரை மறித்தனர்.
ஆனால், காரை நிறுத்தாமல், சிறிது துாரம் சென்றவர்கள், காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். துரத்தி சென்ற போலீசார், காரை சோதனையிட்டதில், 723 கிலோ அளவில், 4.52 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது. காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

