/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின் மோட்டார் திருட முயன்ற வாலிபர் கைது
/
மின் மோட்டார் திருட முயன்ற வாலிபர் கைது
ADDED : நவ 28, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணர் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் செல்வ பிரபு, 48, அரசு பள்ளி ஆசிரியர். இவர் தேன்கனிக்கோட்டை, விவேகானந்த நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு வைத்திருந்த மின் மோட்டாரை நேற்று முன்தினம் காலை ஒருவர் கழற்ற
முயன்றார். அப்போது சாமுவேல் செல்வ பிரபு, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், தேன்கனிக்கோட்டை அடுத்த சாப்ரனப்பள்ளியை தமிழ்ச்செல்வன், 28, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

