/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி, ஓசூரில் கடும் பனிமூட்டம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
/
கிருஷ்ணகிரி, ஓசூரில் கடும் பனிமூட்டம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி, ஓசூரில் கடும் பனிமூட்டம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி, ஓசூரில் கடும் பனிமூட்டம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ADDED : ஜன 27, 2025 02:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று காலை கடும் பனி மூட்டம் இருந்தது. மார்கழி மாதத்தில் லேசான பனிப்பொழிவு மட்டுமே காணப்-பட்ட நிலையில், தை மாதம் பிறந்த பிறகு பனிப்பொழிவு அதிக-ரித்துள்ளது.
ஏற்கனவே சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஏராள-மானோர் சளி, இருமல், காய்ச்சலில் பாதித்துள்ள நிலையில், நேற்-றைய பனிப்பொழிவால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாலையில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு இருந்ததால், முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். நேற்று, குடியரசு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பனி மழை பெய்தது. இதனால் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவ, மாணவியரும், பார்-வையிட வந்த பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். காலை, 10:00 மணிக்கு மேல், சூரிய கதிர்கள் தென்பட்ட பிறகே பனியின் தாக்கம் குறைந்தது. * ஓசூரில் கடந்த சில நாட்களாக இரவில் கடும் குளிரும், காலை நேரத்தில் கடும் மூடு பனியும் நிலவுகிறது. அத்துடன் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குளிரின் தாக்கத்தை அதிகமாக உணர முடிகிறது. நேற்று அதிகாலை முதல், காலை, 8:00 மணி வரை ஓசூர் பகுதியில் கடும் மூடுபனி நிலவியது.
சாலையில் எதிரே வரும் வாகனங்களை கூட பார்க்க சிரமமாக இருந்ததால், முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்கள் சென்றன. கடும் மூடுபனியால் வாகன ஓட்டிகள், வாக்கிங் சென்ற மக்கள் மற்றும் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் சிரமப்-பட்டனர்.