/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரபகுதியில் காற்றுடன் சாரல் மழை
/
நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரபகுதியில் காற்றுடன் சாரல் மழை
நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரபகுதியில் காற்றுடன் சாரல் மழை
நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரபகுதியில் காற்றுடன் சாரல் மழை
ADDED : ஏப் 20, 2025 01:26 AM
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், கொல்லிமலை அடிவார பகுதியில், கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் காற்றுடன் கன மழை பெய்தது. இந்நிலையில், நேற்றும் இப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 5:00 மணியளவில் வானம் இருண்டது. பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கோடைமழையை பயன்படுத்தி, இப்பகுதி மானாவாரி விவசாயிகள், உழவு பணியை தொடங்கியுள்ளனர். மீண்டும் ஒருமுறை மழை பெய்தால் விதைக்க தொடங்கி விடுவர். நேற்று விவசாயிகள் எதிர்பார்த்தது போல் கன மழை பெய்யாததால் ஏமாற்றமடைந்தனர்.* கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளி, நடுக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக இரவில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று மதியம் வரை, வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென மாலை, சூறாவளி காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து, ஒரு மணி நேரம் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனால், கொல்லிமலை அடிவார பகுதியான நடுக்கோம்பை, காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது.