/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் கொட்டிய கனமழைசாலை, குடியிருப்புகளில் தேங்கிய நீர்
/
கிருஷ்ணகிரியில் கொட்டிய கனமழைசாலை, குடியிருப்புகளில் தேங்கிய நீர்
கிருஷ்ணகிரியில் கொட்டிய கனமழைசாலை, குடியிருப்புகளில் தேங்கிய நீர்
கிருஷ்ணகிரியில் கொட்டிய கனமழைசாலை, குடியிருப்புகளில் தேங்கிய நீர்
ADDED : ஏப் 20, 2025 01:26 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரி யில், 60 மி.மீ., மழை பதிவானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம், 102 டிகிரி பாரன்ஹீட் அளவில் காணப்பட்டாலும், மாலை, இரவில் பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு, 8:00 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, 11:00 மணி வரை நீடித்தது.
கிருஷ்ணகிரி நகரில், பழைய பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, ராயக்கோட்டை மேம்பாலத்திலிருந்து ஓசூர் செல்லும் சர்வீஸ் சாலை, மேல் சோமார்பேட்டை, ஆர்.பூசாரிப்பட்டி சாலை குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், கழிவுநீருடன், மழைநீர் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது.
காவேரிப்பட்டணம் பகுதியில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு, குரும்பட்டி கிராமத்தின் வழியாக காரிமங்கலம் முதல், குருபரப்பள்ளி செல்லும் உயர்மின்கோபுரத்தில், 110 கே.வி.,லைன், ஒரு பேஸ் லைன் கட்டானது. இதனால், அங்கிருந்த, 5 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. கனமழையால் மரத்தில் பற்றிய
தீ அணைந்தது. நேற்று காலை மின் பழுதை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். அதேபோல கிருஷ்ணகிரி நகர், பெங்களூரு சாலை சென்ட்ரல் தியேட்டர் அருகே, பழமையான மரம் ஒன்று, வேருடன் சாய்ந்தது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். ஆங்காங்கே ஏற்பட்ட மின்
தடைகளை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.
நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி மழையளவு வருமாறு: கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 60.6 மி.மீ., பெய்தது. தொடர்ந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, 26.40, நெடுங்கல் 12.60, ஓசூர் 5, தேன்கனிக்கோட்டை, பெணுகொண்டாபுரம் தலா 4, சூளகிரி 3 மி.மீ., அளவில் மழை பதிவானது.