/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்ய உதவி மையங்கள்
/
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்ய உதவி மையங்கள்
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்ய உதவி மையங்கள்
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்ய உதவி மையங்கள்
ADDED : நவ 20, 2025 01:45 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல், 'சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்- - 2026' நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த, 4 முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு, 2 படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் ஒரு படிவத்தை கையொப்பமிட்டு, திரும்ப வழங்க வேண்டும். மற்றொரு படிவத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்புகை பெற்று, தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும்.
வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை, பூர்த்தி செய்ய உதவிடும் வகையில், உதவி மையங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும்.
இதில் வாக்காளர்கள், கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதில், ஏதேனும் சந்தேகம் இருப்பின், அதை தெளிவுப்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

