/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எச்.ஐ.வி., விழிப்புணர்வு ஊத்தங்கரையில் பிரசாரம்
/
எச்.ஐ.வி., விழிப்புணர்வு ஊத்தங்கரையில் பிரசாரம்
ADDED : செப் 28, 2025 02:03 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தமிழ்நாடு -எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி., மற்றும் காசநோய் - தடுப்பு குறித்து, கலைநிகழ்ச்சிகள் மூலமாக நேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊத்தங்கரை, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செவிலியர் கண்காணிப்பாளர் விஜயா முன்னிலை வகித்தார். பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஆட்டோவில் விழிப்புணர்வு துண்டு அறிக்கைகள் ஒட்டப்பட்ட நிகழ்வை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நம்பிக்கை மைய ஆலோசகர்கள் காயத்ரி, சேரலாதன், முகேஷ் ஆய்வக நுட்புணர்கள் பாஷா, முரளி, ஸ்திக் தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் கவிதா, முல்லை, ஆனந்த ஜோதி, பிரபு மற்றும் புதுக்குரல் கிராமிய கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.