/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தோட்டக்கலைத்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தோட்டக்கலைத்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 01:34 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தோட்டக்கலை அலுவலர் நலச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் பிரேம்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் செந்தில்குமார் பேசினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சிவக்குமார் பேசுகையில், ''தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத் துறையால் கொண்டு வரப்பட்டுள்ள, 'யு.ஏ.டி.டி., 2.0' திட்டம் என்ற அரசாணையை விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும். மேலும் தோட்டக்கலைத்துறை வளர்ச்சியை உறுதிப்படுத்த தமிழக இத்திட்டத்தை கைவிட வேண்டும்,'' என்றார்.இக்கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை
எழுப்பினர்.

