/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஓசூர் மாநகராட்சி நகராட்சிக்கு கூட தகுதியில்லை'
/
'ஓசூர் மாநகராட்சி நகராட்சிக்கு கூட தகுதியில்லை'
ADDED : ஆக 19, 2025 03:30 AM
ஓசூர், ''ஓசூர் மாநகராட்சி, நகராட்சிக்கு கூட தகுதியில்லை'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற பெயரில், பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்றிரவு நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காலம், காலமாக இஸ்லாமியர்கள், பட்டியலின மற்றும் வன்னியர் சமுதாயங்களை, தி.மு.க., ஏமாற்றி வருகிறது. பஞ்சாப்பை விட போதை பொருட்கள் விற்பனையில் மோசமான மாநிலமாக தமிழகம் உள்ளது.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், 6 நாட்களில் சாராயம், போதை பொருட்கள் இல்லாத சூழலை உருவாக்க முடியும்.
ஓசூர் மாநகராட்சி எனக்கூற அசிங்கமாக உள்ளது. இது நகராட்சிக்கு கூட தகுதியற்ற நகரமாக உள்ளது. இந்தியாவில் மிக வேகமாக வளரும் முதன்மை நகராக ஓசூர் உள்ளது. அதற்கு ஏற்ப சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.
சமூக நீதி பற்றி தெரியவில்லை என்றால், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் சென்று கற்று கொள்ளுங்கள். கர்நாடகாவில், 10 ஆண்டுகளில் இருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து விட்டனர். அனைத்து துறைகளிலும், தி.மு.க., தோற்று விட்டது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.