/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உணவு பார்சல் மாறியதில் தகராறு ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்
/
உணவு பார்சல் மாறியதில் தகராறு ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்
உணவு பார்சல் மாறியதில் தகராறு ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்
உணவு பார்சல் மாறியதில் தகராறு ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்
ADDED : நவ 14, 2025 01:26 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில், தீர்த்தம் செல்லும் சாலையில், அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அங்கு கடந்த, 11, இரவில் சில நபர்கள் வந்து உணவு பார்சல் வாங்கினர். ஆனால் அவர்கள் பார்சலுக்கு பதில், சிக்கன் ரைஸ் பார்சலை எடுத்துச் சென்றனர். பார்சலை மாற்றி எடுத்து சென்ற பழனி, 30, என்பவரது சகோதரர் சக்திக்கு, அருண் போன் செய்தார். கூடுதல் பணத்தை தர கேட்டு வாங்கினார்.
இதில், ஆத்திரமடைந்த பழனி தரப்பினர், ஓட்டலுக்கு வந்து, ஓட்டலில் பணிபுரியும் கார்த்திக், 20, முரளி, 22, ஆகிய இருவரையும் தாக்கினர். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் அருண் அளித்த புகார் படி பேரிகை போலீசார், ஓட்டல் ஊழியர்களை தாக்கிய, அசோக், 32, பிரபு, 30, பழனி, 30, நஞ்சப்பா, 40, ஆகிய நால்வரை தேடி வருகின்றனர்.