/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.29 கோடியில் நலத்திட்ட உதவி 1,957 பேருக்கு வீட்டுமனை பட்டா
/
ரூ.1.29 கோடியில் நலத்திட்ட உதவி 1,957 பேருக்கு வீட்டுமனை பட்டா
ரூ.1.29 கோடியில் நலத்திட்ட உதவி 1,957 பேருக்கு வீட்டுமனை பட்டா
ரூ.1.29 கோடியில் நலத்திட்ட உதவி 1,957 பேருக்கு வீட்டுமனை பட்டா
ADDED : ஜன 04, 2026 07:39 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை மற்றும் பர்கூர் பகுதிகளில், 1,000 பேருக்கு இலவச வீட்டுமனை, 1,400 மகளிருக்கு, 2ம் கட்டமாக மகளிர் உரிமை தொகைக்கான ஆணை, மற்றும், 94 பேருக்கு, 1.29 கோடி ரூபாய் மதிப்பில் திருமண உதவித்-தொகை, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து, சிங்-காரப்பேட்டை பஞ்.,ல், கடப்பரை அணைக்கட்டு கட்ட முதற்கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கான ஆணையை வழங்கினார். மேலும், புதிய ரேஷன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிக-ளையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், மகளிர் உரி-மைத்தொகை, விடுபட்டவர்கள் விண்ணப்பம் அளியுங்கள். அவர்களுக்கும் கிடைக்க நடவ-டிக்கை எடுக்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த, 25 பெண்கள் மற்றும் பட்டம் படித்த, 69 பெண்கள் என மொத்தம், 94 பேருக்கு, 40.75 லட்சம் ரூபாய் திருமண உதவித் தொகை மற்றும், 88.73 லட்சம் ரூபாய், 752 கிராம் தங்கம்
என மொத்தம், 1.29 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து நேற்று மாலை, ராயக்கோட்டை, ஓசூரில் நடந்த நிகழ்ச்-சிகளில் அமைச்சர் சக்கரபாணி, 957 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும், 1,150 மகளிருக்கு உரி-மைத்தொகைக்கான ஆணை மற்றும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து
பேசினார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

