/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14,261 பேருக்கு வீட்டுமனை பட்டா
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14,261 பேருக்கு வீட்டுமனை பட்டா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14,261 பேருக்கு வீட்டுமனை பட்டா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14,261 பேருக்கு வீட்டுமனை பட்டா
ADDED : நவ 24, 2024 12:43 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
14,261 பேருக்கு வீட்டுமனை பட்டா
கிருஷ்ணகிரி, நவ. 24-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், 14,261 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில், 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் பெற்ற பயனாளிகளிடம், கலெக்டர் சரயு கலந்துரைடினார். அப்போது கலெக்டர் பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள, 2,215 பேருக்கும், பிரதமர் ஜன்மான் திட்டத்தில், 349 பேர், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தில், 377, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், 92, மூன்றாம் பாலினத்தவர்கள் 35, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த, 5,677, வன உரிமை சட்டத்தில், 227, கிராம நத்தம் பட்டா, 1,816 பேர் உள்பட மொத்தம், 14,261 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், வீடுகள் கட்டி தரப்படும். இவ்வாறு பேசினார்.
போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, நாகரசம்பட்டி டவுன் பஞ்., தலைவர் தம்பிதுரை, செயல் அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

