/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தி.மு.க.,வினரை விமர்சித்தால் ஆதாரத்துடன் பதிலடி கொடுங்கள்'
/
'தி.மு.க.,வினரை விமர்சித்தால் ஆதாரத்துடன் பதிலடி கொடுங்கள்'
'தி.மு.க.,வினரை விமர்சித்தால் ஆதாரத்துடன் பதிலடி கொடுங்கள்'
'தி.மு.க.,வினரை விமர்சித்தால் ஆதாரத்துடன் பதிலடி கொடுங்கள்'
ADDED : டிச 15, 2024 01:08 AM
'தி.மு.க.,வினரை விமர்சித்தால்
ஆதாரத்துடன் பதிலடி கொடுங்கள்'
கிருஷ்ணகிரி, டிச. 15-
''தி.மு.க.,வினர் மீது, விமர்சனம் வைப்பவர்களின் கருத்தை முழுமையாக கேட்டு, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள்,'' என, தொழில்துறை அமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலருமான ராஜா பேசினார்.
கிருஷ்ணகிரியில், வேலுார் மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணகிரி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார் மண்டல, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலர் இசை வரவேற்றார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:
இளைஞரணிக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்ப அணி உள்ளது. இதன் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில், தி.மு.க.,வினர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்தால், அவற்றை முழுமையாக கேட்டு, அவர்கள் பதிலளிக்க முடியாதபடி ஆதாரங்களுடன் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். லோக்சபா தேர்தலில், 40க்கு 40 வெற்றி பெற்றது போல் வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள், 234 தொகுதிகளிலும் வெல்ல பாடுபட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நந்தகுமார், தேவராஜி, அமுல், நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.