/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்
/
மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்
மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்
மக்கள் புகாரை உடனுக்குடன் தீர்வு காண ஐ.ஜி., அறிவுறுத்தல்
ADDED : டிச 05, 2024 07:12 AM
அரூர்: அரூரிலுள்ள டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு வந்த கோவை மேற்கு
மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், அரூர் சப்-டிவிஷனில் நடந்த குற்ற சம்பவங்கள், கைது செய்யப்பட்ட-வர்கள் விபரம், தலைமறைவாக உள்ள
குற்றவாளிகள், மேலும் பழைய வழக்குகளின் நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். வழக்கு
விசாரணைகளை விரைந்து முடிக்கவும், மக்களின் புகார்க-ளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும்
அறிவுறுத்தினார். ஆய்வை முடித்து கொண்டு ஐ.ஜி., செந்தில்குமார் இரவு, 7.00 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஆய்வின் போது, தர்மபுரி எஸ்.பி., மகேஸ்-வரன், டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.