/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரயிலில் ஓசூர் தம்பதிக்கு மயக்க மருந்து குடிநீர் கொடுத்து நகை, பணம் கொள்ளை

ADDED : அக் 14, 2024 06:40 AM
ஜோலார்பேட்டை: ஓடும் ரயிலில் ஓசூர் தம்பதி யருக்கு, குடிநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளைய டித்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ராஜூ, 75. இவர் மனைவி மாரியம்மாள், 67; இருவரும் கேரள மாநிலம் எர்ணாகுளம் சுற்றுலா சென்று, அங்கிருந்து விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் கடந்த, 11ல் இரவு ஊர் திரும்பினர். ரயிலில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் குடிநீர் கொடுத்துள்ளார். குடித்தவுடன் இருவரும் மயங்கி னர். அவர்களிடமிருந்த, 5 பவுன் நகை, 10,000 ரூபாய், 2 மொபைல்போன், சூட்கேஸை அந்த ஆசாமி கொள்ளையடித்து சென்றார்.
தம்பதியை அழைத்து செல்ல, ஜோலார்பேட்டை ஸ்டேஷனில் உறவினர்கள் காத்திருந்தனர். அவர்கள் இறங்காததால் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயிலில் போலீசார் சோதனை செய்தபோது, முதிய தம்பதி மயங்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. அவர்களை மீட்டு வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தம்பதியிடம் கைவரிசை காட்டிய ஆசாமியை, காட்பாடி ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.