/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.10 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டடம் திறப்பு
/
ரூ.10 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டடம் திறப்பு
ADDED : செப் 30, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி பஞ்., கருத்தமாரம்பட்டியில், 2023 - 2024ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடைக்காக பல்நோக்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அதை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பூஜை செய்து, பெயர் பலகையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கண்ணியப்பன், கவுன்சிலர்கள் ஜெயராமன், மகேந்திரன், பஞ்., தலைவர் முருகம்மாள் சக்தி, சோக்காடி பஞ்., தலைவர் கொடிலா ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

