/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மலைக்கோவில் தேர்த்திருவிழா பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவக்கம்
/
ஓசூர் மலைக்கோவில் தேர்த்திருவிழா பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவக்கம்
ஓசூர் மலைக்கோவில் தேர்த்திருவிழா பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவக்கம்
ஓசூர் மலைக்கோவில் தேர்த்திருவிழா பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவக்கம்
ADDED : பிப் 11, 2025 07:05 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டு-தோறும் மார்ச் மாதம் நடக்கும். இந்த ஆண்டுக்கான தேர்த்திரு-விழா,
ஓசூர் தேர்ப்பேட்டையில், பால்கம்பம் நடும் நிகழ்ச்சி-யுடன் நேற்று துவங்கியது. முன்னதாக,
தேர்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரர் கோவில் அருகே உள்ள விநாயகருக்கு, வாச்சீஸ்வர குருக்கள், சிறப்பு பூஜை செய்தார்.தொடர்ந்து, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன் தேர்கள் மற்றும் பால்கம்பத்திற்கு சிறப்பு
பூஜை நடந்தன. அதன் பின், ஊர் முக்கியஸ்தர்கள் மூலம், தேர் வீதிகளில் பால் கம்பம் ஊர்வ-லமாக
கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, தேர்கட்டும் பணி துவங்கியது.ஓசூர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன்,
பா.ஜ., முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், செயலாளர் பிரவீன்குமார், அ.தி.மு.க., பகுதி
செயலாளர் ராஜி, தி.மு.க., பகுதி செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.தேர்த்திருவிழாவையொட்டி அடுத்த மாதம், 7ல் திருவிழாவிற்கு விநாயகரிடம் பூ கேட்கும்
நிகழ்ச்சி நடக்கிறது. 8ல் திருக்கொடி-யேற்றம், 13 இரவு சுவாமி திருக்கல்யாணம், 14ல் தேரோட்டம், 15ல்
பல்லக்கு உற்சவம், 16ல் தெப்பல் உற்சவம் நடக்க இருப்ப-தாக, விழா குழுவினர் தெரிவித்தனர்.