/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 09, 2024 06:42 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, இந்த ஆண்டில் கடந்த மார்ச், 9 முதல், செப்., 29 வரை, 5 முறை நீர்வரத்து பூஜ்யமாக இருந்தது. செப்., 30 ல், 17 கன அடியாக நீர்வரத்து துவங்கிய நிலையில், அக்., 1ல், 72 கன அடியாகவும், நேற்று முன்தினம், 529 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.
மாவட்டத்தில் கடந்த, 5 நாட்களாக பரவலாக மழை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு, 600 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டதால், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு, 785 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் பாசனத்திற்காக, 178 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 49.65 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கே.ஆர்.பி., அணை பகுதியில் மட்டும், 4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.