/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் கட்டிங், பாலீஷ் கழிவை முறையாக அகற்ற வலியுறுத்தல்
/
கிரானைட் கட்டிங், பாலீஷ் கழிவை முறையாக அகற்ற வலியுறுத்தல்
கிரானைட் கட்டிங், பாலீஷ் கழிவை முறையாக அகற்ற வலியுறுத்தல்
கிரானைட் கட்டிங், பாலீஷ் கழிவை முறையாக அகற்ற வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கிரானைட் மற்றும் பாலிசிங் நிறுவனங்கள், கிரானைட் தொழிற்சாலைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கிரானைட் கட்டிங், பாலிசிங் நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பேசுகையில், “கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்,” என்றார்.
முன்னதாக கிரானைட் தொழிற்சாலைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்து மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்ட நெறிமுறைகள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால் விவரிக்கப்பட்டது. இதில், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் முத்து ராஜ், துணை கலெக்டர் (பயி
ற்சி) க்ரிதி காம்னா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

