/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாடகை செலுத்தாத வீடுகளுக்கு பூட்டு அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்

ADDED : நவ 21, 2025 01:33 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி எழில் நகர் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அடுக்குமாடி குடியிருப்பில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பலரும் வாடகைக்கு குடியிருந்து வரும் நிலையில், பல மாதங்களாக அரசுக்கு வாடகை பணம் செலுத்தாமல் இருந்துள்ளனர்.
அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், நிலுவையிலுள்ள வாடகை பணத்தை பலர் செலுத்தவில்லை. இந்நிலையில் நேற்று, 20 வீடுகளில் இருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே எடுத்து வைத்து, சீல் வைத்தனர். அப்போது வீடுகளில் இருந்த பெண்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, குறைந்தபட்ச தொகையையாவது கட்டி, வீட்டு சாவிகளை பெற்றுக் கொள்ள அதிகாரிகள் கூறிச்சென்றனர்.