/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரு கிலோ மாம்பழத்தை ரூ.50க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
/
ஒரு கிலோ மாம்பழத்தை ரூ.50க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ஒரு கிலோ மாம்பழத்தை ரூ.50க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ஒரு கிலோ மாம்பழத்தை ரூ.50க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி : மா மகசூல் பாதித்துள்ள நிலையில், மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஆரம்ப விலையாக, கிலோ ஒன்றுக்கு, 50 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மா விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையின்றி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வருகிறது. இதனால் மா மகசூல், 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மா விவசாயிகளுக்கும், மாமரங்களுக்கும் இது பேரிடர் காலமாக மாறியுள்ளது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மானாவாரி மா சாகுபடியாளர்கள் கூலி செய்தும், நகைகளை அடகு வைத்தும், டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கியும் மாமரங்களுக்கு ஊற்றி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு தண்ணீர் ஊற்ற ஒரு முறைக்கு, 7,000 ரூபாய் செலவாகிறது.
இதுபோல் பலமுறை தண்ணீர் ஊற்றி மாமரங்களை காப்பாற்ற வேண்டியுள்ளது. மானாவாரி மா விவசாயிகள், 80 சதவீதம் மழையை நம்பியே உள்ளனர். மாமரங்களை காப்பாற்ற போராடும் விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்க வேண்டும். 90 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 சதவீதம் உள்ள மாங்காய்களுக்கு உரிய விலையை அரசு பெற்றுத் தர வேண்டும்.
தற்போது, மா கொள்முதல் செய்ய தொடங்க உள்ளதால், மாவிற்கு ஆரம்ப விலையாக கிலோ ஒன்றுக்கு, 50 ரூபாய் பெற்றுத் தர வேண்டும். வழக்கம்போல், விவசாயிகளை மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் வஞ்சிக்கக்கூடாது. தமிழக அரசு மாவிவசாயிகளை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

