ADDED : ஆக 10, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்ட-ராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார்; இவர், ஓசூர் அருகே பாகலுார் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதில், சேலம் மாவட்டம், ஏற்காடு ஸ்டேஷனில் பணி-யாற்றி வந்த நாகராஜ், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்-பட்டார். இவர் நேற்று மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் ஆகியோரை சந்தித்து விட்டு, ஓசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.